கோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க சட்ட நிறுவனம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது.

கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர் றோய் சமாதானம் சார்பில் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும் நேற்று முன்தினம் கோத்தாபய ராஜபக்சவிடம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த தனியார் சட்ட விசாரணை மற்றும் பாதுகாப்பு நிறுவனமான, பிரீமியர் குறூப் இன்ரநசனல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவே, கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த நீதிமன்ற வழக்கு அறிவித்தல்களைச் சமர்ப்பித்துள்ளது.

Pasadena வில் உள்ள Trader Joes வணிக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்தே, இந்த நீதிமன்ற அறிவிப்புகள் கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அப்போது கோத்தாபய ராஜபக்சவின் மனைவியும் அங்கிருந்தார். இதன்போது ஒளிப்படங்களும் எடுக்கப்பட்டன. அதன் ஆதாரத்தை, பிரீமியர் குறூப் இன்ரநசனல் வெளியிட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம்
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்