மன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதி மீட்கப்பட்டது.

உடுகம – ஜா எல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்