எனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே

இன்றைய உதயன் நாளிதழில் தன்னைப் பற்றி வெளியான செய்தி போலிச் செய்தி என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

“போதிய தெளிவில்லாத நிலையில் கண்டபடி வாய் திறக்க வேண்டாம்- சிவஞானத்திற்கு செக்” என இன்று உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் இன்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும்,

நான் தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர்களில் ஒருவர். என்ன பேச வேண்டுமென்பது எனக்கு தெரியும். கட்சி சார்பில் பேச எனக்கு தகுதியுண்டு. பத்திரிகை செய்திப்படி அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை. நேற்று இரவு, நானும் மாவை சேனாதிராசாவும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி எதுவும் பேசவில்லை – என்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப்
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்