இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர்.

அவ்வகையில் இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினரின் பாரிய படகினை சிறிய இந்திய மீனவர்களது படகின் அருகே அணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.அந்த நேரம் கடற்படையினரின் இரும்பு படகு மரத்தினால் தயாரிக்கப்பட்ட படகுடன் மோதியது. இதன்போது படகில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக புதிய கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இரண்டாவது இந்திய மீனவர்களது படகும் கடற்படையினரின் படகுடன் மோதியே சேதமடைந்ததாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

எனினும் கைதான மீனவர்களது உடலில் காணப்பட்ட அடிகாயங்கள் படகு விபத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவரது கொலை மற்றும் தாக்குதலையடுத்து எழுந்துள்ள சிக்கல்களையடுத்தே தற்போது உயர்மட்ட தலையீட்டில் கதை மாற்றியெழுதப்பட்டதாக தெரியவருகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப்
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன், இனி
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்