தமிழில் தேசிய கீதம் பாடியதால் ரணில் தோல்வியுற்றாராம்!

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம், நடந்த ஐதேகவின் உயர்மட்டக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட ஒவ்வொரு முறையும், ஐதேக, 50 ஆயிரம் சிங்கள பௌத்த வாக்குகளை இழந்துள்ளது என்றும் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, சமுர்த்தி அமைச்சு ஐதேகவிடம் இல்லாததால், மக்களுடன் அதிகளவில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், எனவே அந்த அமைச்சை பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு உரிய வேளையில் இரசாயனப் பசனை கிடைக்காமையினால் கிராமங்களில் ஐதேகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள பௌத்த வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்