சீ.வி.விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் சந்திப்பு

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முத லமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் இன்று 8.30 மணியளவில் விசேட சந்திப்பு ஒன்று நடை பெற்றிருக்கின்றது.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப் பு தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தொ டர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க இயலாமல் இருந்தது. இந்நி லையில் நல்லெண்ண சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. மேலும் முதலமைச்சர் தேர்தல் காலங்களில் நல்ல அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

அதற்காகவும் இன்றைய சந்திப்பு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலமைகள் குறிப்பாக பேசினோம். விசேடமாக உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்னி லங்கையில் உண்டான மாற்றங்கள் தொடர்பாக பேசினோம்.

மேலும் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். தொடர்ந்து தமிழ்தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது. தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும்
வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வடக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருக்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*