கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டங்கள் முழுமையாக வழ ங்கப்படாத நிலையில் பெருமளவான மக்கள் மீள்குடியேற்றத்தின்போது வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகளிலேயே இப்போதும் வாழ்ந்து வரும் அவலம் நடக்கிறது.

மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களி னூடாக வீட்டுத்திட்;டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், தற்போதும் மாவட்டத்தில் சுமா ர் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனாலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டங்கள் முழுமையாக வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் வீடில்லாத மக்க ள் மீள்குடியேற்றத்தின்போது வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகளில் வாழ்கின்றனர்.

இதனால் தினசரி அந்த மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கிளிநெ hச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலை பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவு களிலும் இவ்வாறு வீடற்ற மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் தாங்கள் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதுடன், சிலதற்காலிக வீடுகள் மிக மோசமாக சேதமடைந் து ஆபத்;தான நிலையில் காணப்படுகின்றன.

என்றும் இவ்வாறான வீடுகளில் வாழும் தாங்கள் பல்வேறு நோய்;களுக்கும் விசயந்துக்களின் ஆபத்து க்களையும் எதிர்கொள்;வதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெரிய பரந்தன் பன்னங்கண்டி பொன்னகர், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்;கள்

தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வாழ்ந்து வரும் தமக்கு வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின்
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள
ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தினை புறக்கணிக்க தமிழ் மக்கள் வாழுமிடங்களெல்லாம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் யாழிலும் அத பரவியுள்ளது.யாழில் சுவரொட்டிகளை

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*