வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில்?

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அந்தத் தேர்தல் ஒரே தடவையில் நடத்தப்படுமா அல்லது தனித்தனி மாகாணங்களில் நடத்தப்படுமா என்பது குறித்த தீர்மானங்கள் எட்டப்படவில்லை.
அவரது அறிவிப்பின் பிரகாரம் வடமாகாணசபையின் ஆயட்காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதற்கான தேர்தலுடன் இணைந்ததாக கிழக்கு மாகாணசபை மற்றும் தென்னிலங்கை மாகாணசபை தேர்தல்களையும் நடத்த முயற்சிகள் இடம்பெறுவது வெளிவந்துள்ளது.
முன்னதாக பெப்ரவரி மாதத்துடன் வடமாகாணசபையினையும் கலைத்து அனைத்து மாகாணசபைகளிற்குமான தேர்தல்களை நடாத்துவதற்கான ஆலோசனைகள் தேர்தல் திணைக்களத்திடமிருந்தது.

எனினும் இறுதியில் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட்டதால் மாகாணசபை தேர்தல்கள் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்