தென் ஆப்பிரிக்காவின் அடுத்த அதிபராகிறார் சிரில் ரமபூசா

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க நேசனல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த ஜேக்கப் ஜூமா அதிபராக இருந்த நிலையில் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்படுவார் என கட்சி அச்சுறுத்தியது.

இதனால், கடும் நெருக்கடிக்குள்ளான ஜேக்கப் ஜூமா, இன்று தொலைக்காட்சியில் திடீரென உரையாற்றினார். தனது உரையில், குடியரசின் அதிபர் பதவியில் இருந்து உடனடியாக நான் விலகுகிறேன் என ஜேக்கப் ஜூமா அறிவித்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் அடுத்த அதிபராக தற்போது துணை அதிபராக உள்ள சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டதை அந்நாட்டு தலைமை நீதிபதியும் உறுதிபடுத்தியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து
சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்

About சாதுரியன்

மறுமொழி இடவும்