இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்! ஓமந்தையில் சம்பவம்!

வவுனியா ஓமந்தையில் வான் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வான் வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது.

இதன்போது வேன் குடை சாய்ந்ததில் குறித்த வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்