முன்னணியுடன் பேச தமிழரசு இரகசிய முயற்சி?

வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி கதிரையேற ஏதுவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேச்சு நடத்த தமிழ் மக்கள் பேரவை இணை தலைவர்களுடன் தமிழரசு தலைகள் பேச்சுக்களை நடத்தியுள்ளன.

இணைத்தலைவர்களுள் ஒருவரான மருத்துவர் லக்ஸ்மன் அவர்களை தொடர்பு கொண்டு கதைத்துள்ள தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தானும் சேனாதிராசாவும் தனியாக வந்து கஜேந்திரகுமாரோடு பேச சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டிருக்கின்றார்.

முன்னதாக அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணக்கமான போக்கினை காண்பித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சிறீதரனின் கோட்டையான கிளிநொச்சியிலுள்ள முக்கிய இரு பிரதேச சபைகளிலும் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.இதற்கு கூட்டணி,முன்னணி உள்ளிட்ட தரப்புக்கள் ஆதரவு வழங்கலாமென நம்பப்படுகின்றகின்றது.
அவ்வாறு ஆதரவளித்தால் இவ்விரு சபைகளிலும் ஆட்சி நடத்த விரும்பும் சிறீதரனிற்கு அது தலையிடியாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே சிறீதரனின் சமரச முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்