சபாநாயகருடன் மஹிந்த திடீர் சந்திப்பு!

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் நீதியான தேர்தலொன்றினை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் முடிவுகளை வெளியிடும்போது ஏற்பட்ட தாமதநிலை தொடர்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு தனது வருத்தத்தினைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய மேலும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்