யாழில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் – வடக்கு முதலமைச்சர்!

வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையில் இன்று இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகள் இன்று என்னைச் சந்தித்து சென்ற முறை கலந்துரையாடியவற்றின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடினோம்.

சென்ற தடவை நடைபெற்ற கலந்துரையாடலின் போது பல விடயங்கள் தொடர்பில் கதைத்திருந்தோம். சென்ற தடவையை விட ஒரு மாதத்தில் நல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆவா குழுவினருடன் தொடர்புடைய பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

அத்துடன், குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவுவோர் தொடர்பாக கடந்த கூட்டத்தில் பேசப்பட்டமைக்கு அமைய இன்றும் அது தொடர்பில் பேசப்பட்டது.

இது தொடர்பான விபரங்களைத் தாம் திரட்டிக்கொண்டிருப்பதாகவும், அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பணம் அனுப்புவர் ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு இன்ரபோல் காவல்துறையின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்