தமிழர்களும் காவல்துறையில் இணைய முன்வரவேண்டும் – முதல்வர்

வடமாகாண இளைஞர், யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடமாகாண காவல்துறை அதிகாரிகளுக்குமிடையே முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வடமாகாணசபையின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, வடமாகாணத்தில் 474 காவல்துறையினருக்கான வெற்றிடங்கள் காணப்பட்டுள்ளபோதிலும், இணைவதற்கென 20பேர் விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுச் சென்றாலும் அதில் இருவரே இணைவதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்கள் காவல்துறை சேவையில் இணைய விரும்புவதில்லையெனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், இளைஞர்களை காவல்துறையில் இணையவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்