வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை! – தென்கொரிய அதிபர்

வடகொரியாவுடன் போரை விரும்பவில்லை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை வீசி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் அணுஆயுத போர் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மூத்த அதிகாரிகளுடன் தலைநகர் சியோலில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் நடைபெறக்கூடாது. எத்தகைய பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அமெரிக்காவும் பதற்றத்தை தணிக்க உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென்கொரிய அதிபரின் கருத்தால் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. மேலும் வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து
சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்

About செய்தியாளர்

மறுமொழி இடவும்