சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் நிலை – சி.வி.கே.சிவஞானம் கவலை!

சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிமுதல் செய்யப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன் போதே அவர் இக் கருத்தை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை அரசியலில் உள்ளுராட்சிமன்ற முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவது பொருத்தமானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
“தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” என
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணை
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*