நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் தொடர்பில் இலங்கைக்கு ஐ.ரோ.ஒன்றியம் வலியுறுத்தல்!

காணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால் இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்களில் பலர் பங்கேற்கமுடியாத நிலை ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவருகின்ற சாத்வீகப் போராட்டத்தின் ஒருவருடப்பூர்த்தியை செவ்வாய்க்கிழமையன்று பூர்த்திசெய்த நிலையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளது.

காணாமற்போனோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் நினைவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில் யாருக்காக அலுவலகம் செயற்பட போகின்றது என முல்லைத்தீவில் காணாமல்
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நி லையை வெளிப்படுத்தகோரி கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*