காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்கா பணியகம் கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

“காணாமல்போன தமது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்கள் சரியாக தெரியாததால் பல இலங்கையர்கள் தேசிய நல்லிணக்கத்தில் பங்கு கொள்ள முடியாதிருக்கும்.

சிறிலங்கா அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான தனது கடப்பாட்டை மதிக்க வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்