டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை-மாவை

மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் பதவியை அவருக்கு கொடுக்கவிரும்பினால் கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோமுடியும். அமைச்சராக இருந்த அவர் செய்யாததை நாங்கள் வெளியில் இருந்து செய்துள்ளோம் . அவரது அமைச்சுப் பதவிகளைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை எனதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிஅரசில் ஈடிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசில் அமைச்சுப் பதவிபெறுவதற்கு கூட்டமைப்பே தடையாக இருந்ததாக கூறப்படுகின்ற நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கூட்டமைப்பு ஆட்சிமைக்கும் உள்ளுராட்சிசபைகளில் கூட்டமைப்பிற்குடக்ளஸ் ஆதரவை வழங்கினால் மத்தியில் அமைச்சுப் பதவியைபெற்றுக் கொள்வதற்கு கூட்டமைப்பும் இணக்கம் தெரிவிக்குமெனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இது குறித்து மாவை சேனாதிராசாவிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது விடயம் சம்மந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,மைத்திரி–ரணில் கூட்டுஅரசில் டக்ளஸ்தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும். இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் வழங்குவதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்கள்.

ஏனெனில் ஒவ்வொருகாலத்திலும் அவர் அமைச்சராகவே இருந்துவந்திருக்கிறார். அதற்காக டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப்பதவி கொடுப்பதை தடுக்கவேண்டுமென்றோ அல்லது அவர் அமைச்சராவது எமக்கு அச்சமென்றோ அல்ல. அவ்வாறான சூழல் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

எங்கள் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையிலே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம். இன்றுள்ள கூட்டுஅரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளபிரச்சனையில் எங்கள் இனம் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமென்றேதான் யோசிக்கின்றோமே தவிர நாங்கள் மாகாண சபை எப்படி இருக்கவேண்டுமென்றோ அல்லதுஉள்ளுராட்சிமன்றங்கள் யார் யாரிடம் இருக்கவேண்டும் என்று கவனம் செலுத்தவில்லை.

நாங்கள் ஒரு இலக்கை அடைவதற்காக அதாவது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக வெளியில் இருந்து ஆதரித்துவருகிறோம். அதுதான் உண்மையானது. அதனைநாங்கள் ஏற்றுக் கொள்வோம். இனப்பிரச்சனைக்குத் தீர்வைக் காண்பதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதை சிங்கள மக்களுக்கு சர்வதேசத்திற்கும் சொல்கின்ற கடப்பாடு எங்களுக்கும் இருக்கிறது.

இனப்பிரச்சனைக்கான தீர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவந்தால் அதற்கு 3 இல் 2 பெரும்பான்மை வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே ஒவ்வொருசந்தர்ப்பத்திலும் செயற்படுகின்றோம். அவ்வாறானதீர்வைப் பற்றித் தான் யோசிக்கிறோமே தவிர நாங்கள் அமைச்சுப் பதவிகளை பெறபோட்டியிடவில்லை.அல்லது அமைச்சுப் பதவிகளைபெறுவதற்கு தடுக்கவும் இல்லை.எங்கள் இலக்கு மிகவும் புனிதமானது.

நாம் வேண்டுமானால் கிட்டத்தட்டநான்கு அமைச்சுக்கள் மற்றும் பிரதி அமைச்சுக்கள் பெற்றிருக்கலாம் ஆனால் நாம் அதற்காகபோட்டியிடவில்லை. அந்தநிலைப்பாட்டிலும் நாங்கள் இல்லை. அமைச்சர் பதவி இல்லாமல் தான் முன்னெப்போதும் இல்லாதவாறு வரவுசெலவுத் திட்டத்தில் பலவிடயங்களை உள்ளடக்கி அதனை நிறைவேற்றியிருக்கிறோம் யாராவதுவிரும்பினால் அமைச்சராகவரட்டும். அவ்வாறு அமைச்சராக இருந்த அவர்கள் பழக்கப்பட்டவர்கள்தான். ஆயினும் அமைச்சர்களாக இருந்து செய்யாதை நாங்கள் செய்துள்ளோம்.. அமைச்சராக இருந்தகாலத்தில் இவ்வாறு ஏதும் செய்துள்ளாரா என்றும் பார்க்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்