யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்

யாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவின் ஊடாகவே அவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் வட்டுக்கோட்டை சுழிபுரத்தை சேர்ந்த நிசாந்தன் என்றும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்று தெரியவந்துள்ளது.

இத் திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்