கூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்படுகின்றது. எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. வடக்கில் சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகம் நடத்தத் தெரிவுகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபைகளில் ஆட்சி அமைக்க ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு வெளியே இருந்து ஆதரவு வழங்கும்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வகிக்கும் சபைகளில் பொதுமக்களுக்கு நன்மையான விடயங்கள் வரும்போது அவற்றை நாம் ஆதரிப்போம். பிழையான விடயங்கள் ஏதாவது வந்தால் நாம் அதனை எதிர்ப்போம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்