இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தக்குதல்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது. அதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “காலை 5:32 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகளை குறிவைத்தும், கிராம மக்களை குறிவைத்தும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் அடாவடிக்கு வலிமையாகவும், திறமையாகவும் பதிலடியை கொடுத்தது,” என்றார். பூஞ்ச் சப்-செக்டார் மான்கோடேவிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு, ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தன்னுடைய அடாவடியை தொடங்கி உள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இவ்வாண்டு அதிகரித்து உள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 285 முறை அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பீடுகையில் அதிகமானது.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்