மக்களால் நிராகரிக்கப்பட்டவர் சம்பந்தன் – மகிந்த பேட்டி

கூட்டு எதிர்க்கட்­சியை 54 வீத­மான மக்­கள் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் நிரா­க­ரித்­துள்­ள­னர் என்று இரா.சம்­பந்­தன் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். நாட்டு மக்­க­ளில் 93 வீத­மா­னோர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நிரா­க­ரித்­ததை அவர் மறந்­து­விட்­டார்.

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, கண்டி தலதா மாளி­கை­யில் நேற்று வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டார். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது,

தற்­போது எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கும் சம்­பந்­தன் அண்­மை­யில் ஒரு விட­யத்­தைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். எமது தரப்­பி­னர் உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் பெற்ற வாக்­கு­கள் அரசு பெற்ற மொத்த சத வீதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் குறை­வா­கவே உள்­ளது என்று கூறி­னார்.

அப்­ப­டி­யென்­றால் அவர்­க­ளும் அர­சின் ஒரு தரப்­பி­னர் என்­ப­து­தான் பொரு­ளா­கும். அர­சின் ஒரு தரப்­பி­ன­ராக இருக்­கும் ஒரு கட்­சி­யி­னர் எவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்க முடி­யும். அதற்­குப் பொருத்­த­மா­ன­வரா என்­ப­தைச் சிந்­திக்­க ­வேண்­டும்.

எதிர்­கட்­சித் தலை­வர் பத­வியை கூட்டு எதிர்­கட்­சிக்கு வழங்­கு­வது நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு முர­ணா­னது என்று கூட்­ட­மைப்­பி­னர் குறிப்­பி­டு­வது, வேடிக்­கை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. கூட்டு அர­சின் பங்­கா­ளி­யாக மாத்­தி­ரம் செயற்­ப­டும் எதிர்­கட்சி தலை­வர் சம்­பந்­தன், தனது பத­வி­யின் கட­மை­களை கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளா­மல் ஒரு­த­லை­பட்­ச­மா­கவே செயற்­ப­டு­கின்­றார்.

எதிர்­கட்சி தலை­வர் என்ற பத­வி­யா­னது அர­சுக்கு எதி­ரா­கவே செயற்­ப­ட­வேண்­டும். அப்­போ­து­தான் ஆளும் அரசு நிர்­வா­கத்தை முறை­யாக கொண்டு செல்ல முற்­ப­டும். ஆனால் இலங்­கை­யில் அவை சாத்­தி­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்­கட்சி பதவி ஒன்று உள்­ளதா? என்­பது தொடர்­பில் மக்­கள் மத்­தி­யில் பெரும் கேள்­வி­யா­கவே உள்­ளது. உறு­தி­யற்ற அர­சால் நாட்­டுக்கு எந்­த­வித பய­னும் இல்லை. ஆகவே நாட்­டின் நலன் கருதி கால­தா­ம­த­மின்றி நாடா­ளு­மன்­றத்தை கலைத்து புதிய ஆட்சி அதி­கா­ரத்தை உரு­வாக்க வேண்­டும் – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்