வவுனியாவில் காதலன் மரணம்! புதுக்குடியிருப்பில் காதலியும் தற்கொலை!

வவுனியா – கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த விடுதியில் நேற்று முன்தினம் மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். இதன் போது குறித்த விடுதியில் 31 வயதுடைய ரகுநாதன் சுகிர்தரன் என்ற நபர் இருந்துள்ளார்.

காலை 9.30 மணியாகியும் சுகிர்தரன் அறையினை விட்டு வெளியே வராத காரணத்தினால் விடுதியில் தங்கியிருந்த மற்றைய நபர் அறையின் கதவினை உடைத்துள்ளார். அதன் போது ரகுநாதன் சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த இளைஞனின் காதலியும் நேற்று காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததன் காரணமாக இப் பெண்ணும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக பொரிஸார் பல்வேறு விதத்திலும் தங்களது விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்