சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு பெண்

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல இரத்நாயக்கவிடம் இருந்த சட்டம், ஒழுங்கு அமைச்சு மீளப் பெறப்பட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பதவியில ஒரு வாரமே நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்தவாரம் நிகழவுள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு, தற்போது அமை்சர் பதவியில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், சரத் பொன்சேகாவுக்கு இந்தப் பதவியை வழங்குவதற்கு சஜித் பிரேமதாச மற்றும் அஜித் பெரேரா ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்