கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் நீதியின்மையால் தமிழர்கல் பாதிப்பு – ரவிகரன்

கடந்த காலத்தில், 1983 வரை தமிழர்களிடம் இருந்த கரவலைப்பாடுகள் இன்று தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களங்களின் முறையற்ற நடவடிக்கைகளே காரணம் என வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

சிறு தொழிலாளர்களுக்கு இறங்குதுறைகள் போதாத நிலைமை முல்லை கரையோர சில இடங்களில் நிலவுகின்றது இருந்தும் கரவலைத் தொழில்களுக்காக முன்னைய காலத்தில் பாடுகள் வழங்கப்பட்டதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது 25 தொடக்கம் 40 வரையான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பாகும்.

தற்போது தென்னிலங்கையில் இருந்து கையூட்டுக்கள் கொடுத்து அனுமதிகளைப் பெற்று வருபவர்கள் உழவு இயந்திரத்தின் மூலம் கரவலை இழுக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கடல்தொழில் திணைக்களங்கள் இருக்கின்றன.

கரவலைச்சட்டமானது ஆகக்கூடியது 2700மீற்றர் தூரம் வரையே வளைக்கலாம் இது மனித வலு மூலம் இழுக்கக்கூடியது. தற்போது மனித வலுவை புறந்தள்ளி உழவு இயந்திரத்தின் மூலம் 6000 மீற்றருக்கு மேல் கரவலை வளைக்கின்றார்கள். இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்மை தனிநபர் வாழ்வாதார பாதிப்பு, மற்றும் நீண்ட தூரத்துக்கு வலை வளைப்பதால் சிறு படகு தொழிலாளர்கள் பாதிப்பு, கடலிலும், மீன் உற்பத்திகளில் பாரிய பின்னடைவு பாசிகள், சேறுகள், சிப்பிகள், சங்குகள் அதனோடிணைந்த கடல்தாவரங்கள் அழிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தின் மூலம் கரவலை இழுப்பதால் தரையில் மண்ணரிப்பை தடுக்கவல்ல அடம்பன் கொடி, எருக்கலைகள், இராவணன் மீசை என்று சொல்லப்படும் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.
சட்ட விரோத இத்தொழில் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என பலருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரை இதற்கான தீர்வுகள் இல்லை. சரியான தீர்வுகள் காணப்பட்டு இவை நிறுத்தப்படாவிட்டால் தமிழ் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே என்றும் தெரிவித்தார்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்