கிணற்று தவளையாக கருத்து சொன்ன தமிழ்நாடு மனநல மருத்துவர் Dr சாலினி.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மனநல மருத்துவரான Dr சாலினி என்பவர் ஈழப்போர் சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றை வெளியிட்டு ஈழத்தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

“பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஈழப்போர் தேவையற்ற வெட்டிப்போர்” என்று எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு அவதூறை வெளியிட்டிருக்கிறார்.

அவசரப்படாமல் மிகவும் இதமாக பேசி விவாதம் செய்யக்கூடய மனநல மருத்துவராக பலகாலம் அறியப்பட்ட கற்றறிந்த பிரபலமான Dr சாலினி அவர்கள் இந்தக்கருத்தை ஏன் இப்போ கூறவேண்டும் பின்னணியில் ஏதாவது அரசியல் சதி இருக்கிறதா என்ற ஐயமும் கூடவே எழுந்து நிற்கிறது.

Dr சாலினி அவர்கள் அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்தபோது ரொறன்ரோ மாகாணத்தில் தான் சில ஈழத்தமிழர்களை சந்தித்ததாகவும், அப்போ அந்த ஈழத்தமிழர்கள் ஈழத்தில் நடந்தது தேவையற்ற வெட்டிப்போர் என்றும், முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி இருந்திருக்காவிட்டால் இப்போது தாங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது என்றும் கூறியதாக கூறி அதனால் ஈழப்போர் தேவையற்ற விதமாக நடத்தப்பட்ட வெட்டிப்போர் என்று முடிவுக்கு வருவதுபோன்ற ஒரு செய்தியை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஈழப்போர் மட்டுமல்ல,

‘கியூபா பிரட்சித் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இந்த உலகம் மிகத் தவறான புரிதலையே கொண்டுள்ளது. அவர் மீதான புரட்சிப் பிம்பம் வலிந்து உருவாக்கப்பட்ட ஒன்று. அவர் அந்தப் பட்டத்துக்கெல்லாம் தகுதியானவர் இல்லை. கியூபா மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று.

அங்கிருக்கும் வயது வந்த பெண்களுக்கு வேறு வழியில்லாமல் அவரவர் சொந்தத் தாய்மார்களே மாமா வேலை பார்த்துத் தான் ஜீவித்திருக்க வேண்டும் எனும் அளவுக்கு மிக மிக மோசமான அளவில் சீரழிந்துள்ள நாடு கியூபா. நாட்டில் இத்தனை பிரச்னைகள் இருக்க அதை ஒழித்துக் கட்ட ஒன்றும் செய்யாமல் சும்மா வேடிக்கை பார்த்தவர் தான் இந்த ஃபிடல் காஸ்ட்ரோ.

இந்த உலகத்தின் முன் ஃபிடல் கஸ்ட்ரோ அவர்கள் ஒரு புரட்சித் தலைவராக போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். என கியூபாவிலிருந்து வந்த மக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஷாலினி தனது பதிவுகளில் பகிர்ந்துள்ளார்.

தன்னை சந்தித்த ஒரு சிலர் கூறிய கருத்துக்களை வைத்துக்கொண்டு சாலினி அவர்கள் எப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

பலகோடி மக்கள் சம்பத்தப்பட்ட உணர்வுமயமான விடயம் ஒன்றில் கருத்துச்சொல்லும்போது தரவுகளுடன் ஆதாரபூர்வமாக கருத்துச்சொல்லுவதுதான் நியாயமாக இருக்கும். Dr சாலினி போன்ற பிரபலங்கள் சொல்லும் கருத்து உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் விளிம்பு நிலையில் இருப்பவர்களை குளப்பிவிடும் என்பது சாலினி புரியாதவர் அல்ல.

கனடாவில் உள்ள சிலர் சொன்னார்கள் என்பதைவிட Dr சாலினி என்ன நினைக்கிறார் என்பதை தெரியப்படுத்துவதுதான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு அருகில் கூப்பிடு தொலைவில் உள்ள ஒரு இடத்தில் 40 வருடங்களாக நடந்த போர் நிலைபற்றி Dr சாலினி அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் என்ன புரிதலை இருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

அப்படி அவர் தெரியப்படுத்தாத வரை அவர் எப்படி மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் செய்து உளவியல் புரிதலை உண்டுபண்ணுவார் என்பதும் பெரும் சந்தேகமே.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்