துரைராசா ரவிகரன் கைதாகி விடுதலை!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில், ரவிகரன் அவர்கள் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

அத்தோடு ஆர்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.

இணைப்பு –

மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்