தெண்டர் ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய கல்வி அமைச்சுடன் பேச்சு.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் குறித்தான பிரச்சகைனக்கு முதற்கட்டமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வவேஸ்வரன் மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஐ; காரியவாசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் அதன் பின்னராகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 117 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போது தொண்டர் ஆசியரியர் நியமனம் குறித்து மன்னாள் கல்வி அமைச்சரால் கவனயீர்ப்பு பிரேரனையொன்று கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரனை சபையில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டன் பின்னரே இறுதியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தமது மாறுபட்ட கருத்துக்களையே சபையில் முன்வைத்திருந்த நிலையிலையே இது குறித்தான விளக்கத்தை அமைச்சர் சர்வேஸ்வரன் வழங்கியிரந்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்..

வுடக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான கடிதங்கள் வந்திருக்கின்ற போதும் ஏனைய பலருக்கு அந்தக் கடிதங்கள் வரவில்லை. இதனால் அனைவருக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாகவே தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் மத்திய கல்வி அமைச்சிற்குச் சென்ற தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரியிருந்தனர். அதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமே நியமனத்தை வழங்க வேண்டாமென தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

ஆனால் ஒரு பகுதியினருக்கே அந்த நியமனம் வந்துள்ளதாலும் அனைவருக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கொரிக்கை உள்ளதாலுமே அனைவரக்கும் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆகவே சபையின் தீர்மானத்திற்கமைய மத்திய கல்வி அமைச்சுடன் பேசி அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் தெரிவிக்கின்றேன் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்