ஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கெரெசெக் பிராந்தியத்தில் குண்டுகள் தயாரிக்கும் பகுதியொன்றில் ஜேர்மனை சேர்ந்த தலிபான் உறுப்பினரை கைதுசெய்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது பெயரை வெளியிடாத அதிகாரிகள் அவர் ஜேர்மனிய மொழியில் பேசுகின்றார் நான் ஜேர்மனியை சேர்ந்தவன் என தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக தலிபான் அமைப்புடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்