ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு.

பௌத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில் யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் அருங்காட்சியகத்தில் வரலாற்று பதிவாக சர்வதேச மாநாடு சென்ற திங்கள் கிழமை நடைபெற்றது.

இம் மாநாட்டில் சர்வதேச ரீதியாக அரசியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள் , கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு ரொகிங்கா மக்களுக்கு இழைக்கப்படும் இனவழிப்பை கண்டித்தும் அதை உடனடியாக நிறுத்துவதற்கும் ஓங்கி குரல்கொடுத்தார்கள். யேர்மன் பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் , யேர்மன் மனிதவுரிமை சபையின் பிரதிநிதிகழும் கலந்துகொண்டனர். இவ் நிகழ்வில் கல்விமான்கள் தமது உரைகளில் தமிழின அழிப்பை குறிப்பிட்டும் பேசினார்கள்.

மாநாட்டின் இறுதியில் இன அழிப்பிற்கு உள்ளான அல்லது உள்ளாக்கப்படும் அனைத்து இனத்தையும் நினைவேந்தி Brandenburger Tor முன்றலில் இருந்து யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் கல்லறைகளை நோக்கி அடையாள சுடர்ப்பேரணி கடும் குளிரிலும் சிறப்பாக நடைபெற்றது.பேரணியின் இறுதியில் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளும் தோழமையோடும் ஒற்றுமையோடும் இனப்படுகொலையை கண்டித்தும் உரையாற்றினார்கள். இம் மாநாட்டை குழப்புவதற்கு மியார்மாரின் தூதரகத்தால் சிலர் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்