பிலிப்பைன்ஸில் பயங்கரம் – 32 பேர் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸ் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையின் போது 32 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டேர்டேயின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தில் ஓரேநாளில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளது இதுவே முதற்தடவை என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவத்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மதியம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 32பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் நாங்கள் இதனைவிட பாரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம் எனினும் 24 மணிநேரத்தில் இவ்வளவு பேர் கொல்லப்பட்டது இதுவே முதற்தடவை என குறிப்பிட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் எவரையும் கொலை செய்ய முயலவில்லை பரஸ்பரமோதல்களின் போதே 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிலர் நாங்கள் தெரிவி;ப்பதை நம்பப்போவதில்லை ஆனால் நாங்கள் விசாரணைகளிற்கு தயாராகவுள்ளோம் எனவும் அதிகாரிகள்
பிலிப்பைன்ஸ் முன்னெடுத்து வரும் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லபட்டுள்ள நிலையிலேயே புதிய உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்