ஜெனீவா மற்றும் ரணிலின் பதவி பறிப்பில் இருந்து தப்பிக்கும் பின்னணியில் தூண்டப்படும் இனமோதல்!

இசுலாமியர்களுக்கு எதிரான சிங்கள காடையர்களின் இனவெறித் தாக்குதல் கண்டி திகன பகுதியில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று நாடு முழுமைக்கும் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாதாக காட்டிக்கொண்டாலும் நாடு தழுவியதாக இசுலாமியர்களுக்கு எதிரான இன வன்முறையை தூண்டிவிடும் முணைப்பில் அரச தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக் கூறும் விடையத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தில் எதனையுமே செய்யாது காலம் கடத்தி வரும் சிறிலங்கா அரசின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமர்வில் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முணையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவியில் இருந்து தூக்கியெறிய திட்டமிடப்பட்டிருந்தது. இவ் இரண்டு நெருக்குவாரங்களில் இருந்தும் இந்த அரசை பாதுகாக்கும் நோக்கிலேயே சாதாரண விடயத்தை பூதாகாரப்படுத்தி இன்று நாடு தழுவியதான பரபரப்பிற்குள்ளாகிய இன மோதலுக்கு வித்திட்டுள்ளார்கள்.

இன்று உலகம் தழுவியதாக சிறிலங்கா தொடர்பில் பேசுபொளாக்கப்பட்டிருக்கும் இன மோதல் விவகாரத்திற்குள் மேற்கூறிய விடயங்களை நீர்த்துப் போக வைக்கலாம் என்ற அடிப்படையில்தான் ரணில் ஆதரவு சக்திகளால் இவ் இனவன்முறை தூண்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓராங்கமாகத்தான் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் செவி வழியே வரும் வதந்திகளை உறுதிப்படுத்த முடியாபத சூழல் ஏற்பட்டு இன்னும் பதற்றம் அதிகரிக்கவே வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*