முல்லைதீவில் இராணுவம் தேவையில்லை:மக்கள் முடிவு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேசங்களில் மக்களின் காணிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை மீட்பது தொடர்பாகவும், படையினரை வெளியேற்றுவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பில் படையினருக்கு காணி வழங்குவதில்லை என்றே மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். மக்களது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே விடுதலைப்புலிகள் தலைமையினது பயன்பாட்டிலிருந்த காணிகளை படையினருக்கு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்த கருத்து பற்;றி மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை காட்டமாக முன்வைத்திருந்தனர்.
புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக் காணி உள்ளிட்ட காணிகளில் படையனர் முகாமிட்டு நிலை கொண்டுள்ள நிலையில் அவற்றில் பல ஏக்கர் காணிகள் மக்களுடையவை. இக்காணிகளை விடுவிக்க மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.அங்கிருந்து வெளியேற படையினருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், அந்தக் காணிகள் முழுமையாக விடுக்கப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்