நாளை குதிக்கின்றது தமிழரசின் புதிய சுதந்திரன்?

இணைய மற்றும் சமூக ஊடகங்கள் நடத்திவரும் கடுமையான விமர்சனங்களைஎதிர்கொள்ளவும் தமக்கான ஆதரவு தளத்தை பலப்படுத்தவும் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புதிய சுதந்திரன் நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளராட்சி மன்ற தேர்தலில் தமக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணமாக ஒரளவு படித்த தரப்பிடையே புழக்கத்திலுள்ள இணையபயன்பாடே காரணமென தமிழரசுக்கட்சி கருதுகின்றது.

இதனால் இணைய மற்றும் சமூக ஊடகங்களை எதிர்கொள்ள உரிய பொறிமுறை தேவையென எம்.ஏ.சுமந்திரனிற்கு ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களது சத்தியபிரமாண நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வின் போது புதிய இணையத்தளமான புதிய சுதந்திரனை அங்குரார்ப்பணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்
வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*