யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பாலியல் வல்லுறவுகளுக்கு சமூக வலைத்தளங்களே காரணம்! – பொலிஸ் அதிகாரி

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே யாழ்ப்பாணத்தில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்பதால், பிள்ளைகளை அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு யாழ். பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் நடந்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகளவான சம்பவங்கள் யாழ். மாவட்டத்திலேயே நடந்துள்ளன. இவற்றுக்கு சமூக வலைத்தள பயன்பாடு உதவியாக இருந்துள்ளது.

பிள்ளைகள் கல்வி கற்கும் காலத்தில் சமூக வலைத்தள வசதிகளுடன் கூடிய தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளம் புதல்விகள் உள்ள தாய்மார் தமது பிள்ளைகளின் தொலைபேசிகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அழைப்புகள் குறித்து மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

திருமணமான தாய்மார் தமது குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லவும் குடும்ப வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்
வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*