கொலைக் குற்றச்சாட்டில் மூவர் கைது!

நுகேகொடை- தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள், 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்டதாகக் கருதப்படும் அலைபேசிகள் மற்றும் ஒரு ஜோடி தங்கக் காதணி என்பவற்றை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.

கடந்த 3ஆம் திகதி 80 வயதான பெண் ஒருவர், நுகேகொடை- தலபத்பிட்டிய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்