விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரித்ததாக, 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு சுவிஸ் – பெலின்சோனாவில் உள்ள பிராந்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த எட்டு வாரங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக, சுவிஸ் நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த வழக்கு விசாரணைக்காக இதுவரையில் 4 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இந்த செலவினத்தொகையை, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களிடம் இருந்தே அறவிட வேண்டும் என்று அரசத் தரப்பு சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்