ஜெனிவாவில் நேற்று நடக்கவிருந்த சிறிலங்கா குறித்த விவாதம் திங்களன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால மீளாய்வு விவாதம், வரும் 19ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு விவாதம், நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவிருந்தது.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள் திடீரென ஊதிய அதிகரிப்புக்கோரி நடத்திய போராட்டத்தினால், பேரவையின் நேற்றைய அமர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால் ஒத்திவைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு விவாதம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்