யாழில் பொலிஸாருக்குக் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

பொலிஸாருக்குக் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஒருவரது மோட்டார் சைக்கிள் பறிபோனது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் நடந்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். முட்டாஸ் கடைச் சந்தியில் அவர்களை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டனர்.

ஏற்கனவே பிறிதொரு போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக அவரது வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை அவர் காண்பித்துள்ளார். அது செல்லுபடியற்றது எனக் குறிப்பிட்டு தமக்கு இலஞ்சம் தருமாறு பொலிஸார் கோரினர் என்று கூறப்படுகிறது.

அந்த நபர் தன்னிடம் பணம் இல்லை. இருக்கும் பணம் தனது பிள்ளையின் மருத்துவச் செலவுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

பொலிஸார் அவரது மோட்டார் சைக்கிளைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்போவதாக கூறி அங்கிருந்த வாகனமொன்றை அழைத்துள்ளனர்.

அதற்கு அந்தநபர் தனது மோட்டார் சைக்கிளை வேறொரு வாகனத்தில் ஏற்றினால் பிரச்சினை ஏற்படும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சந்தியில் அதிகளவான பொதுமக்கள் கூடிவிட்டனர்.

அதையடுத்துஅங்கிருந்த போக்குவரத்துப் பொலிஸார் தமது பொலிஸ் நிலைய வாகனத்தை வரவழைத்து அதில்மோட்டார் சைக்கிளை ஏற்றிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்