ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்

தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், கடந்த 16ஆம் நாள், சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஐ.நா பணியாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தினால், அன்றைய அமர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.

இதனால் சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இன்றை விவாதத்தில் சிறிலங்கா தரப்பு குழுவுக்கு ஜெனிவாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமை தாங்குவார்.

அதேவேளை, நாளை மறுநாள் சிறிலங்கா தொடர்பான தமது இடைக்கால அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதையடுத்து நடக்கவுள்ள விவாதத்தில் பங்கேற்று பதிலளிப்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்டோர் அடங்கிய குழு ஜெனிவா செல்லவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்