சசிகலாவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஈபிஎஸ்,ஓபிஎஸ் – கேசி பழனிச்சாமி பரபர தகவல்

சசிகலாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கேசி பழனிச்சாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என கூறினார் கே.சி. பழனிச்சாமி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சன் நியூஸ் சேனலுக்கு கேசி பழனிச்சாமி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

என்னை நீக்கியிருப்பதன் மூலம் பாஜகவின் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது அம்பலமாகி உள்ளது. இதுவரை பாஜகவை எதிர்த்து பேசக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் உரையில் திராவிடம் குறித்தும் பாஜகவை எதிர்த்தும் பேசியிருந்தார். இதனடிப்படையில் பாஜகவை எதிர்ப்போம் என கூறினேன்.

விவாதங்களில் சசிகலாவை மிகக் கடுமையாக பேசக் கூடாது என சிலர் மூலம் எனக்கு சொல்லி அனுப்பினர். சசிகலாவுடன் அதிமுக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு கே.சி. பழனிச்சாமி கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்