சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கரிசனை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர்,

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையிலான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்.

இது இந்தியாவின் அனைத்துலக நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது.

சீனா எல்லை இடங்களிலும் தலையீடு செய்கிறது. நேபாளத்தில் டோக்லம், சிறிலங்கா, மாலைதீவு, மியான்மார் என்று எல்லா இடங்களிலும் சீனாவின் தலையீடுகள் உள்ளன.

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகள் விரிவடைந்து வருகின்றன.

இந்த நிலையில், உலக ஒழுங்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு மாற்றான மூன்றாவது சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்