யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு வருகைதரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ ஒன்பது வீதியின் பத்திரிசியார் கல்லூரி சந்திப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கொண்டுள்ளனர்.

புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கிச் செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அத்துடன் கல்லூரிக்குள் உட்பிரவேசிக்க முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காரில் இருந்தவாறே பார்வையிட்டு, கல்லூரிக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவருகிறது.இதேவேளை யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்