ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று கையளித்தனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில், 55 நாடாளுமன்ற உறப்பினர்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களில் 51 உறுப்பினர்கள் கூட்டு எதிரணியையும், நான்கு பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்ந்தவர்கள்.

இந்தப் பிரேரணையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச கையெழுத்திடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்