அமெரிக்காவுக்கு செல்ல நாமலுக்கு அனுமதி மறுப்பு!

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் வானூர்தி மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரைப் நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்சவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாமல் தனது உத்தியோகபூர்வ கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய எமிரேட்ஸ் வானூர்தி சேவையூடாக , அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மறுப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரியான விளக்கம் எதுவும் வழங்கப்படாமல் தான் அமெரிக்கா செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்று நாமல் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் செல்லுபடியான நுழைவிசைவு இருந்தும் அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்