ஜ.நாவில் சிறீலங்காவுக்கு யேர்மனி எச்சரிக்கை!

இலங்கையின் முயற்சிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தீவிர ஆதரவு தெரிவித்து வந்த போதிலும், பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் காலதாமதம் கவலையடையச் செய்துள்ளது என ஜேர்மன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட போதே ஜேர்மன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறை சுதந்திரம், நல்லிணக்க செயற்பாடுகள், காணாமல் போனோர் அலுவலகம் போன்ற விடயங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தை மாற்றியமைத்தல் போன்ற ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதிலுள்ள தாமதங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வெறுப்பை தூண்டும் பிரசாரங்கள் மூலம்; கட்டவிழ்த்துவிடப்பட்ட சமீபத்திய வன்முறை கவலையளிப்பதாக தெரிவித்த ஜேர்மன் பிரதிநிதிகள் பாகுபாடு மற்றும் வன்முறைகள் மூலம் இலக்குவைக்கப்படுபவர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டியதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இலங்கையின் தாமதமான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
நில அபகரிப்புகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என மனித உரிமைகளுக்கான ஐ.நா.-வின்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால மீளாய்வு விவாதம், வரும் 19ஆம் நாள்
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச

About இலக்கியன்

மறுமொழி இடவும்