பிலிப்பைன்சில் ஓரேநாளில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் ஓரே நாளில் 13 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
புதன்கிழமை தலைநகரிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 13 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளதுடன் சுமார் 100 பேரை கைதுசெய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை காரணமாக 5000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளன நிலையிலேயே புதன் கிழமை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓன்பது நகரங்களில் 60 நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் முன்னெடுத்ததாகவும் புலாகன் என்ற பகுதியில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் உட்பட அனைத்து விதமான குற்றங்களிற்கும் எதிரான நடவடிக்கையின் துரதிஸ்டவசமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஆயுதங்களை வைத்திருந்த சந்தேகநபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டவேளை காவல்துறையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டதால் இவர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்