விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணியில் மர்மபொருள்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்ற விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலை புலிகளின் தங்கம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி மீட்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனடிப்படையிலில் கனரக (பக்கோ) வாகனத்தின் உதவியில் சம்பந்தப்பட்ட பகுதியில் தங்கம் மீட்பு பணிக்காக 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தோண்டப்பட்ட பகுதியில் கனரக வாகனத்தில் மர்ம பொருள் ஒன்று முட்டியுள்ளதால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதனை தங்கம் புதைத்த கொங்கிரீட் என நினைத்து மீண்டும் நீதிமன்றின் அனுமதியுடன் மீட்பு பணி நடைபெற்றுள்ளது.

விடுதலை புலிகளின் தங்கம் தோண்டும் பணியில் மர்மபொருள்!

இந்நிலையில் 4 மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணியில் கனரக வாகனத்தில் முட்டியது, முல்லைத்தீவு கரையோர பகுதியில் காணப்படும் பாறைகள் என தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் தங்கம் மீட்பு பணி நிறைவுக்கு வந்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின்
தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி

About இலக்கியன்

மறுமொழி இடவும்