காணியை துப்பரவு செய்யப்போனவருக்கு காத்திருந்த அதிா்ச்சி – மூதூரில் சம்பவம்!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் உள்ள பட்டியடி பகுதியில் காணியை துப்பரவு செய்யும் போது இரண்டு மிதிவெடிகள் தென்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்றையதினம் (22-03-2018) வியாழக்கிழமை காலை குறித்த காணியின் சொந்தக்காரா் தனது காணியை பெக்கோ இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது இரண்டு மிதி வெடிகள் தென்பட்டதையடுத்து மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளாா்.

காணியை துப்பரவு செய்யப்போனவருக்கு காத்திருந்த அதிா்ச்சி – மூதூரில் சம்பவம்!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மூதூர் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று மிதிவெடியினை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட அதிரடிப்படையினரின் அனுமதியுடன் இவ் மிதிவெடிகளை செயழிலக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ளவுள்ளதாக காணிச் சொந்தக்காரரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்